Tuesday, December 5, 2017

இறக்கை

இறக்கை இழந்த பறவை போல் உணர்கிறேன்....... நீ உன் இருக்கையில் இல்லாதபோது......

Friday, September 15, 2017

வாழ்க்கை

விடுமுறை நாட்களில் ஊரின் நடுவிலே கூட்டமாய் கூடி கவலையின்றி விளையாடிய நாட்களையும் ...!!!!

ஞாயிறு அன்று ஒளிபரப்பாகும் படத்துக்காக முன் கூட்டியே இடம் பிடித்து உட்கார்ந்த நாட்களையும் ......!!!

பள்ளியின் இறுதி மணி கேட்ட பிறகு இருக்கும் இடம் தெரியாமல் பள்ளியை விட்டு ஓடிய நாட்களையும் .!!!

ஒரு ஊருலே என்று தொடங்கும் பாட்டியின் இரவு நேர கதை கேட்ட நாட்களையும் ..!!!

தீபாவளிக்கு எடுத்த புது துணியை உடுத்த விடியும்வரை தூங்காமல் காத்திருந்த நாட்களையும் .!!!

மாடி வீட்டு அழகையும், மாட்டு வண்டியில் பயணித்த நாட்களையும் மறந்து..... !!!

ஏதோ ஒரு இலக்குடன் அடுத்த நாளை நோக்கி நகர்கிறது........ வாழ்க்கை என்னும் நமது பயணம்......