viswa
Thursday, January 31, 2019
கண்கள்
அழகு என்னும்
அளவிட முடியாத
அதிசயத்தை.....
அளவிட்டு காட்டும்
அதிசிய கருவி
ஆண்களின் கண்கள்.....
Thursday, April 5, 2018
வயது
குறைவானதாக எண்ணி ஒன்றை
கூட்டி சொன்னோம் அன்று......
அதிகமானதாக நினைத்து இரண்டை குறைத்து
சொல்லுகிறோம் இன்று...
Tuesday, December 5, 2017
Friday, September 15, 2017
வாழ்க்கை
விடுமுறை நாட்களில் ஊரின் நடுவிலே கூட்டமாய் கூடி கவலையின்றி விளையாடிய நாட்களையும் ...!!!!
ஞாயிறு அன்று ஒளிபரப்பாகும் படத்துக்காக முன் கூட்டியே இடம் பிடித்து உட்கார்ந்த நாட்களையும் ......!!!
பள்ளியின் இறுதி மணி கேட்ட பிறகு இருக்கும் இடம் தெரியாமல் பள்ளியை விட்டு ஓடிய நாட்களையும் .!!!
ஒரு ஊருலே என்று தொடங்கும் பாட்டியின் இரவு நேர கதை கேட்ட நாட்களையும் ..!!!
தீபாவளிக்கு எடுத்த புது துணியை உடுத்த விடியும்வரை தூங்காமல் காத்திருந்த நாட்களையும் .!!!
மாடி வீட்டு அழகையும், மாட்டு வண்டியில் பயணித்த நாட்களையும் மறந்து..... !!!
ஏதோ ஒரு இலக்குடன் அடுத்த நாளை நோக்கி நகர்கிறது........ வாழ்க்கை என்னும் நமது பயணம்......
Sunday, August 21, 2016
பேருந்து பயணம்
வழித்தடத்திலே
வீட்டின்
வெளியிலே
உறங்குபவர்களை கண்டு
ஏங்குகிறது.....தூக்கமில்ல
என் இரவு
நேர பேருந்து பயணம்......
வீட்டின்
வெளியிலே
உறங்குபவர்களை கண்டு
ஏங்குகிறது.....தூக்கமில்ல
என் இரவு
நேர பேருந்து பயணம்......
Saturday, August 20, 2016
Sunday, March 29, 2015
தொலைவில் நீ ......!!!!!
நீ என் தொலைவில் இருப்பதை
உணர்த்துகிறது....
" சோர்ந்து போன என் முகமும்
காய்ந்த என் உதடும்........"
உணர்த்துகிறது....
" சோர்ந்து போன என் முகமும்
காய்ந்த என் உதடும்........"
Subscribe to:
Comments (Atom)